கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?
ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!
புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது நெட்ஜியர் இந்தியாவில் 100 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து விரிவடைந்து வரும் எங்கள் சென்னை மென்பொருள் மேம்பாட்டு மையத்தில், தற்போது 15க்கும் குறைவான நிபுணர்கள் ஆராய்ச்சி, முக்கிய மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முயற்சிகளுக்கு பங்களித்து வருகின்றனர்.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சென்னையில் உள்ள பொறியியல் குழுவை 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் விரைவாக விரிவுபடுத்த நெட்கியர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனது முதலீட்டை விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!