தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் ஊ.கரிசல்குளம், தோப்படைப்பட்டி, ஊசம்பொட்டல், ஒழுகுபுளி, சொக்கலிங்கபுரம், இதைச் சுற்றியுள்ள வருவாய்க் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றாா்.