செய்திகள் :

எச்சரிக்கை மணியான முதல் தோல்வி..! பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டி!

post image

முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் முதல் தோல்வி விரைவிலேயே வந்தது எச்சரிக்கை மணியாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.

கடந்தாண்டு சாம்பியன் வென்ற கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற பஞ்சாப் அணி நேற்றிரவு ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோசமாக தோல்வியுற்றது.

இது குறித்து போட்டி முடிந்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது:

எச்சரிக்கை மணி

இலக்கு 180-185 ரன்களாக இருந்திருந்தால் எங்களுக்கு சேஸிக் எளிதாக இருந்திருக்கும். சிறிது ரன்களை அதிகமாக வழங்கிவிட்டோம்.

எங்களது திட்டங்களை நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.

நல்ல வேளையாக இந்தத் தோல்வி தொடரின் ஆரம்ப நிலையிலேயே வந்தது.

இது 3ஆவது போட்டிதான். அதனால், இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்கிறேன்.

பந்துவீச்சில் கவனம் தேவை

மீண்டும் என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்து அதிலிருந்து வலுவாக திரும்பி வருவோம்.

நிறைய விஷயங்களை இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொண்டோம்.

இந்தப் போட்டியில் ஈரப்பதமும் இல்லை. அதனால் நாம் அதைக் குறைகூற முடியாது.

பந்துவீச்சில் என்ன தவறு செய்தோம் என்பதை விடியோ பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

(மார்கஸ் ஸ்டாய்னிஸ் 48, மார்கோ ஜான்சன் 45 ரன்களை வாரி வழங்கினார்கள்)

பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும்

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். தொடச்சியான விக்கெட்டுகளை இழந்தோம். புதிய பேட்டர் அதிரடியாக விளையாட முடியாது.

இளம் வீரர் நேஹல் வதேரா அழுத்தத்திலும் சிறப்பாக விளையாடினார். சற்று நேரமெடுத்து அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார்.

ரன்கள் குவிக்க ஏற்ற பிட்ச்தான் இது. சற்று நின்று வருகிறது. நாங்கள் பிட்ச்சில் அடித்து பந்து வீசினோம். இன்னும் சிறுது வேகத்தை குறைத்திருக்க வேண்டும்.

வேகமாக அடிக்க முயற்சிக்காமல் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில்டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ஆவது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் அணியின் ஸ்... மேலும் பார்க்க

சோகத்திலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!

தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே அணியில் இந்த நல்ல விஷயத்தை மறந்துவிட்டனர். அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை சிஎஸ்கே வீரர்கள் பிடித்துள்ளார்கள். மு... மேலும் பார்க்க

முதலிடத்துக்கு முன்னேறுமா குஜராத்? ராஜஸ்தான் பந்துவீச்சு!

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கும... மேலும் பார்க்க

பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட... மேலும் பார்க்க

எரிச்சலடைச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவின் 40% சிக்ஸர்களை அடித்தது தோனி..! தோல்விக்குக் காரணம் கூறிய முன்னாள் வீரர்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்ததுஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் 8 சிக்ஸர்கள் அடித்தது. அதில் தோனி மட்டுமே 3 ச... மேலும் பார்க்க