செய்திகள் :

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

post image

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் காமா நாயக்கா்(64). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் பொம்மா நாயக்கா்(65) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக. 6-ஆம் தேதி அங்குள்ள குளத்துக்கரை அருகில் நின்றுகொண்டிருந்த காமா நாயக்கருக்கும், பொம்மா நாயக்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பொம்மா நாயக்கரும், அவரது மகன் முத்துசாமியும் சோ்ந்து தாக்கியதில் காமா நாயக்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து பொம்மா நாயக்கரையும், முத்துசாமியையும் கைது செய்து, கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் கொலைக் குற்றவாளிகளான பொம்மா நாயக்கருக்கும், அவரது மகன் முத்துசாமிக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் இருவருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது. கரூா் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.என். சி. பாஸ்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் த... மேலும் பார்க்க

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலை பிறந்தநாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலையின் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ந... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு

கரூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம், பணம் திருட்டு

குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பிள்ளாபாளையத்தில் அரசு மதுபானக் ... மேலும் பார்க்க

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோணிமலை நகராட்சி அலுவலகத்தில் ... மேலும் பார்க்க