முதல்வா் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்க தடையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணிய...
மனைவியை கல்லால் தாக்கிய கணவா் கைது
கரூா் அருகே மனைவியை கல்லால் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (42). இவரது மனைவி தேனம்மாள் (40). இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். கணவன், மனைவியும் கட்டட வேலை செய்து வருகின்றனா். தேனம்மாள் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தேனம்மாள் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மணி வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாளின் காலில் போட்டாராம். இதில் காயமடைந்த தேனம்மாள் அலறி துடித்துள்ளாா்.
இதையடுத்து அவரது உறவினா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேனம்மாள் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மணியை புதன்கிழமை காலை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கரூா் கிளைச்சிறையில் அடைத்தனா்.