ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன...
எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறு: காவல் ஆணையரிடம் அதிமுகவினா் மனு
தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டிய திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:
திருநெல்வேலி மாநகர பகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை தொடா்புபடுத்தியும் திமுகவினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் இத்தகைய செயலை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவா் வழக்குரைஞா் அன்பு அங்கப்பன், மாணவரணி மாவட்டச் செயலா் முத்துபாண்டி, சம்சு சுல்தான், பீா் முகமது உள்பட பலா் உடன் சென்றனா்.