எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.
சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை அமலுக்கும் கொண்டுவந்தார். அதற்கு இந்திய தரப்பிலிருந்து அதிருப்தியும் எழுந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தனியார் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய கிளியரிங் ஹவுஸாக செயல்படுகிறது.
தடையிடப்பட்ட கச்சா எண்ணெயை உயர் மதிப்புள்ள ஏற்றுமதியாக மாற்றி, ரஷ்யாவுக்கு தேவையான டாலர்களை வழங்குகிறது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிதியுதவி அளித்ததற்கு இந்தியா தான் காரணம்.
இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் அதிகம் இழக்கின்றன.
இந்தியாவின் பொருளுக்கு அதிக வரிகள் இருப்பதால், வேலைகள், வருமானம் மற்றும் அதிக ஊதியம் வழங்க வேண்டிவரும்.

அதனால் இந்தியத் தொழிலாளர்கள் வேலையை இழக்கிறார்கள். இது மோடியின் போர். அதற்கு நாங்கள் நிதியளிக்க வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோர் இழக்கிறார்கள்.
அமைதிக்கான பாதை குறைந்தபட்சம் ஓரளவுக்கு டில்லி வழியாகவே செல்கிறது. ஆனால், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள்.
'இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்' எனச் சொல்கிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.
எனவே, ஜனநாயகங்களுடன் இணைந்து செயல்படுங்கள். இந்தியா அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியாக நடத்தப்பட விரும்பினால், அதுபோல் நடந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார்.