செய்திகள் :

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

post image

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று(வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்த வாரத்தின் முதல் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். நண்பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிர்கட்சியினரின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 4 ஆம் தேதி(திங்கள்) காலை 11 மணிக்கு அவை செயல்பாடுகள் மீண்டும் துவங்கும் என அவைத் தலைவர் அறிவித்தார்.

Rajya Sabha proceedings have been adjourned until 11 AM on 4th August for Opposition uproar over Bihar's electoral rolls revision

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

மணிப்பூரில் மலர் விழாவை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் மலர் விழாவை நாகாலாந்தை தளமாகக் கொண்ட தொலைக்... மேலும் பார்க்க

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலருக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீண்டகாலமாகவே அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்ற... மேலும் பார்க்க

நடனமாடி ஓணம் கொண்டாடிய தில்லி முதல்வர் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு சக பெண்களுடன் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: 12 மணிநேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தின் அருகே 110 மீட்டர் நீளமுடைய பாலத்தை 12 மணிநேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர். தற்போது, ராணுவத்தினர் கட்டிய ப... மேலும் பார்க்க

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவிகித வரியால், அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.இந்தியா மீதான வரிவிதிப்பால், இந்தியாவில் செயல்படும் அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎ... மேலும் பார்க்க

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்கள... மேலும் பார்க்க