செய்திகள் :

எந்திரா... Sci fic படங்களின் தாக்கம்; ரோபோவை துணையாகதேர்ந்தெடுத்த சீன நபர் -ஒரு நாள் வாடகை தெரியுமா?

post image

சினிமா எப்போதும் பலருக்கு நிதர்சன வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சினிமாவின் தாக்கத்தால் செய்த ஒரு செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Humanoid Robot
Humanoid Robot

சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற இளைஞருக்கு சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளைக் கொண்ட படங்கள் என்றால் அலாதி ப்ரியம். அப்படி தொடர்ந்து சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் ஈர்க்கப்பட்டவர் நிஜ வாழ்க்கையில் ஒரு ரோபோவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்.

25 வயதான இவர் நியூ யார்க் பல்கலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த இந்த இளைஞர் தற்போது இன்ப்ளூயன்சராக 1.4 மில்லியன் பின் தொடர்பாளர்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டிருக்கிறார். நிதர்சன வாழ்க்கையில் ரோபோவுடன் இணைந்து வாழ முடிவெடுத்த இவர் இந்த ரோபோவுக்காக நாளொன்றுக்கு 1,20,000 ரூபாயை வாடகையாக செலுத்தி வருகிறார்.

Zhang Genyuan
Zhang Genyuan

இந்த ரோபோ 127 செ.மீ உயரம் மற்றும் 35 கிலோ எடை கொண்டது. ஜாங்குடன் சேர்ந்து சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது உள்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் இந்த ரோபோ கவனித்துக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, இந்த இளைஞருடன் இணைந்து காஃபி ஷாப் செல்வது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களையும் இந்த ரோபோ செய்து வருகிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மனிதர்களுக்கு முன்பே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 'லைக்கா' என்ற நாய் - பயணம் எப்படி இருந்திருக்கும்?

1957ஆம் ஆண்டு பூமியிலிருந்து முதல் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். லைக்கா என்ற பெண் நாயை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். அமெரிக்கர்கள் குரங்கு மற்றும் சிம்பான்சிகளை அனுப்ப பர... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் `பவர் பேங்க்' எடுத்துச் செல்ல தடை ஏன் தெரியுமா?

ஏர்லைஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பல பொருள்களை பயணிகள் எடுத்துச்செல்லவும் தடைவிதிக்கிறது, லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எளிதில் எரியக்கூடிய... மேலும் பார்க்க

Sunita Williams: "துணிச்சலால் உருவானவர் சுனிதா வில்லியம்ஸ்" - நினைவுகளைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இன்று, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மிகப்பெரிய நிம்மதி எனத் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகை... மேலும் பார்க்க

Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற திமிங்கலங்கள்!; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

9 மாதங்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்பட நால்வரை அழைத்து வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்க... மேலும் பார்க்க

"4 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்குவார்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்... மேலும் பார்க்க

FireSat satellite: எலான் மஸ்க்குக்கு நன்றி கூறிய சுந்தர் பிச்சை; என்ன காரணம்?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் காட்டுத்தீயைக் கண்டறிந்து, கண்காணிக்க 50 -க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது. அதில் முதல் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. கல... மேலும் பார்க்க