செய்திகள் :

என்எல்சி நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் : 22/2024

பணி: Junior Overman (Trainee)

காலியிடங்கள்: 69

சம்பளம்: மாதம் ரூ. 31,000 - 1,00,000

தகுதி: பொறியியல் துறையில் Mining, Mining Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mining Sirdar

காலியிடங்கள்: 102

சம்பளம்: மாதம் ரூ. 26,000 - 1,10,000

தகுதி: பொறியியல் துறையில் Mining Engineering தவிர இதர பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது பிரிவினர் 30-க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.

ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் Quantitative Aptitude, Reasoning and General Awareness போன்ற பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Junior Overman பணிக்கு ரூ.595, Mining Sirdar ரூ.486. எஸ்சி, எஸ்டி பிரிவினர் சேவைக் கட்டணமாத முறையே ரூ. 295, ரூ. 236 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2025

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டி... மேலும் பார்க்க

ஐஐஎம்-இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) புத்த கயாவில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் பொறியாளர் வேலை: காலியிடங்கள்: 182

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் உள்ள என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட் (என்ஜிஇஎல்) நிறுவனத்தில... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் ல... மேலும் பார்க்க

விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சர்.சி.வி. ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பயிற்சி பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண் : 05 / 20... மேலும் பார்க்க