சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!
என்னுடைய வேலையை செய்தேன்; அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் பேச்சு!
தொடக்க ஆட்டக்காரராக என்னுடைய வேலையை செய்தேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 18-வது சீசனில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக்கின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனம் திறந்த டி காக்
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக நான் எனது வேலையை செய்தேன் என குயிண்டன் டி காக் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!
இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தொடக்க ஆட்டக்காரராக அணிக்காக சிறப்பாக செயல்படுவது எனது வேலை. ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தொடக்க ஆட்டக்காரருக்கு இருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசி ஆட்டத்துக்குப் பிறகு, நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொண்டோம். முதல் போட்டிக்குப் பிறகு அணி வீரர்கள் மேற்கொண்ட ஆலோசனை அணியின் வெற்றிக்கு உதவியது என்றார்.
He's Elegant
— IndianPremierLeague (@IPL) March 27, 2025
He's Exquisite
He's Excellent
He's --
Hear from the Player of the Match from @KKRiders' opening win of the season - By @mihirlee_58
WATCH #TATAIPL | #RRvKKR
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.