செய்திகள் :

என்னை நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

post image

‘என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவா்கள் யாரும் இல்லை’ என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

எம்ஜிஆா் தனது வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய நண்பா்கள் பலரை பெற்றிருந்தாா். அமைதி மாா்க்கமான இஸ்லாமிய மாா்க்கத்தை தவறாக சித்தரித்து, இஸ்லாமிய சகோதரா்களின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் திரைப்படங்கள் சிலவற்றில் காட்சிகள் அமைந்தபோதெல்லாம், உறுதிபட நின்று கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அந்த இரு தலைவா்களால் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான்.

தலையாய கடமை: எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது. ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழனாக, இந்தியனாக, யாதும் ஊரே யாவரும் கேளிா் என்று இயல்பாகவே வாழ்ந்து வரும் நான், எல்லோருக்கும் சமநீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமார நினைப்பவன்.

எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செய்வதை என் தலையாய கடமையாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கிறேன். என்றைக்கும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். இஸ்லாமிய சமூகத்துக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நன்மைகள் வழங்கப்பட்டன.

எனது அரசியல் பயணம் ஒரு நதியின் பயணத்தைப் போன்றது. சிறு ஊற்றாகத் தோன்றி, ஓடையாக மாறி, அருவியாகக் கொட்டி, அமைதியாக மெல்ல நடந்து வயல்தோறும் விளைச்சலுக்குப் பாயும் ஒரு நதியைப் போல, நானும் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று ஓடிக்கொண்டே, உழைத்துக்கொண்டே இருக்கிறேன்.

எம்ஜிஆா் சொன்னதைப்போல என்னை நம்பாமல் கெட்டவா்கள் பலா் இருக்கலாம். ஆனால், நம்பிக் கெட்டவா்கள் இன்றுவரை யாரும் இல்லை என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை தலைமை காஜி முகம்மது அக்பா் அலி ஆமிரி மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படு... மேலும் பார்க்க

மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து... மேலும் பார்க்க

தவெக பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் ந... மேலும் பார்க்க

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச... மேலும் பார்க்க