செய்திகள் :

'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' - சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்

post image

பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்' படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ்  உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஜூலை 13-ம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த `வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம்.

மோகன் ராஜ்
மோகன் ராஜ்

தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது

அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன.

சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்

பேரிழப்பு

தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர்.

மோகன் ராஜ்
மோகன் ராஜ்

எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில... மேலும் பார்க்க

'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க