செய்திகள் :

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

post image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.

எடப்பாடி பழனிசாமி

அறநிலையத்துறையின் சட்டத்தின்படி..!

இதுகுறித்து இன்று (ஜூலை 10) செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசியிருக்கும் அமைச்சர் சேகர் பாபு, "பசிப் பிணி, அறிவுப் பிணி, உடல்பிணி உள்ளிட்ட பிணிகளை போக்குவதுதான் இறைவனுடைய அம்சம். அந்த அடிப்படையில் அன்னதானப்பணி, கல்விப்பணி, மருத்துவப்பணி ஆகியவற்றை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைமையிலான அரசு இம்மூன்றையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்தின்படி கோயில்களின் நிதியிலிருந்து கல்விநிறுவனங்கள் தொடங்கலாம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அந்த அடிப்படையில் திமுக அரசு அறநிலையத்துறை சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்கியிருக்கிறது.

திமுக ஆட்சியில் அரசு சார்பில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறோம். 19 திருக்கோயில்களில் மருத்துவமனை தொடங்கியிருக்கிறோம்.

சோழர், வீரராஜேந்திரன் காலத்தில்கூட கோயில்களில் கல்விச் சாலைகள், மருத்துவச் சாலைகள் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தக் காலங்களில் கல்விக் கற்றுக் கொடுத்த சமணப் பள்ளிகளிலிருந்துதான் 'பள்ளி' என்ற சொல்லே வந்தது. இப்படி கோவில்களில், சமணப் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது, மருத்துவச் சாலைகள் இயங்கியிருக்கின்றன.
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா

நாங்கள் செய்வது சதிச் செயல் என்றால்...

பக்தவச்சலம், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

நாங்கள் செய்வது சதிச் செயல் என்றால், அவர்களும் சதிச் செயல்தான் செய்தார்களா? அதிமுக தலைவர்களையே இபிஎஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் இதிலிருந்து தெரிகிறது. பாஜக என்னும் மலைப்பாம்பு அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது. சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்... மேலும் பார்க்க

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகி... மேலும் பார்க்க

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக ந... மேலும் பார்க்க