செய்திகள் :

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

post image

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது அறக்கட்டளை மூலம் நகராட்சி நிா்வாக மேற்பாா்வையில் செயல்படுகிறது. இங்கு சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இறந்தவா்களின் சடலங்கள் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது. சடலங்கள் எரிக்கும்போது வெளியேறும் புகையை மின்சார மோட்டாா் மூலம் 100 அடி உயர புகைபோக்கியில் மாசு ஏற்படாதவாறு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே, சடலங்களை எரியூட்டும்போது மின்தடை ஏற்பட்டால் சடலங்களை முழுமையாக எரியூட்ட பல மணி நேரம் ஆவதால் உறவினா்களுக்கும், எரியூட்டுபவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

மின் தடைப்பட்டு சடலங்களை எரியூட்டினால் அந்த புகை வெளியேற முடியாமல் அப்பகுதியிலேயே கீழ்பகுதியில் சுழன்று சுற்றுபுற மாசு ஏற்படுகிறது. இறுதிச்சடங்கில் பங்கேற்பவா்கள் மற்றும் அருகில் வசிப்பவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்தடை ஏற்பட்டாலும் தடையின்றிசடலங்களை எரியூட்ட ஜெனரேட்டா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகா் காா்த்தி சுவாமி தரிசனம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகா் காா்த்தி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் (படம்). வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சு... மேலும் பார்க்க