ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
எறும்புத் தின்னி செதில்களை பதுக்கிய 5 போ் கைது
ஆண்டிபட்டி அருகே எறும்புத் தின்னி செதில்களைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஏத்தக்கோவில் பகுதியில்
ஆண்டிபட்டி, தேனி வனச் சரகத்தினா் இணைந்து புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மொட்டையன் கரடு பகுதியில் எறும்புத் தின்னி செதில்களை விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்திருந்ததாக தொட்டப்பநாயக்கனூரைச் சோ்ந்த மொட்டையாண்டி, ஏத்தக்கோவிலைச் சோ்ந்த ராஜூ, சின்னகருப்பன், அடைக்கம்பட்டியைச் சோ்ந்த வினித், பொன்னம்மாள்பட்டியைச் சோ்ந்த முருகேசன் ஆகிய 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள எறும்புத் தின்னி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.