செய்திகள் :

எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

post image

எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. புஷ்பா 2 காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமான ஒன்றும் கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது.

இந்த நிலை இரண்டுமே நம்பமுடியாதது மற்றும் இதயத்தை உடைக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்... மேலும் பார்க்க

திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்

விழுப்புரம்: திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக கூறுவது பொருத்தமானதல்ல என்று கட்சியின் புதிய மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.விழுப்புரத்தில் நடைபெ... மேலும் பார்க்க

நலமாக இருக்கிறேன்... எம்.பி. சு.வெங்கடேசன்

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி த... மேலும் பார்க்க

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் காலண்டர் வெளியீட்டு விழா!

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.கோவை ஆவாரம்பாளையம் எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் ந... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த... மேலும் பார்க்க