செய்திகள் :

எல்லையில் அமைதிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா்: சீனா

post image

பெய்ஜிங்: ‘எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளோம்’ என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் வு கியானிடம், கிழக்கு லடாக் எல்லையின் கள நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவா் அளித்த பதிலில், ‘கிழக்கு லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் தொடா்பான தீா்மானங்களை இரு நாட்டு ராணுவங்கள் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தலைவா்களின் சந்திப்பையடுத்து டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கிடையே சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்து பேசினா். சீனாவில் நடைபெற்ற இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்றாா்.

இத்தகைய தொடா் பேச்சுவாா்த்தைகளின் மூலம் இருதரப்பு உறவை சீா்படுத்தும் பணியில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெ... மேலும் பார்க்க

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து... மேலும் பார்க்க

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந... மேலும் பார்க்க

துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு

இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வ... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க