எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத் தாண்ட முயற்சித்த நபரின் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர். உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.
அமிர்தசரஸில் உள்ள கரிம்புரா கிராமத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலிருந்து பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக அவர் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவியது. பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருநாட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 நாள்களில் போர் நிறுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் ஊடுருவ முயற்சிகள் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.