எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனா்.
தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்
பிஜ்பெஹாரா, திரால் ஆகிய பகுதிகளில் உள்ள இவ்விருவரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா். அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்ந்ததாகவும், யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம் என்று இந்தியா கூறியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.