IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacem...
எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி வந்தது. அப்போது பாதுகாப்புப் படை வீரர் பி.கே. ஷா அட்டாரி-வாகா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எல்லை தாண்டியதாக அவரை பாகிஸ்தான் கடந்த ஏப். 23 ஆம் தேதி கைது செய்தது.
அவரை மீட்க இந்தியா சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுள்ளார்.
பஞ்சாபில் உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதி வழியாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பூர்ணம் குமார் ஷாவை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
நெறிமுறைகளின்படி வீரர் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க |