செய்திகள் :

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

post image

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘ஞானபீடம்’ விருது பெற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை இரவு காலமானாா். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | காந்திகூட இப்படி போராடவில்லை! அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை!! - திருமா

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

'ஞானபீடம், பத்ம பூஷன், சாகித்ய அகாதெமி உள்ளிட்ட உயர் விருதுகளை வென்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன்.

நாலுகெட்டு, அசுரவித்து, மஞ்ஞு, காலம் போன்ற நாவல்கள், நிர்ம்மால்யம், பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீரகாத போன்ற திரைப்படங்கள் வழியே கேரள மாநிலத்தின் சமூக மாற்றங்களை மிக நுணுக்கமாகப் படம்பிடித்துக் காட்டிய படைப்பாளராக அவர் திகழ்ந்தார்.

தமிழ், ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல்களின் வழியே, மலையாளிகளைக் கடந்த பெரும் வாசகப் பரப்பைச் சொந்தமாக்கிக் கொண்டவர் அவர்.

மலையாளத் திரையுலகின் கிளாசிக்குகள் எனக் கருதப்படும் பல படங்களுக்கு வாசுதேவன் திரைக்கதை எழுதியதோடு, தாமே சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார், தேசிய விருது முதலிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநராக மட்டுமன்றி மாத்ருபூமி இதழின் ஆசிரியராக இருந்து, பல இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்த வகையில் மலையாள மொழிக்கும் கேரளச் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

நவீன மலையாள இலக்கியத்தின் முகங்களுள் ஒருவராக விளங்கிய எம்.டி. வாசுதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை!

பிகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.ஹுசைனாபாத் கிராமத்தைச் சேர்ந்த பிண்ட்டு ரஜாக், குன்ஹேசா எனும் கிராமத்திலுள்ள அரச... மேலும் பார்க்க

பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 8 பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.பட்டிண்டா மாவட்டத்திலிருந்து டல்வாண்டி சாபோ எனும் ஊரை... மேலும் பார்க்க

கார் தாக்குதலில் 35 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை !

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் ஃபான் வெய்குய் (வயது-62) என்ற நபர் தனது மனைவியுடன் விவாகரத்த... மேலும் பார்க்க

2024-ல் கடல்வழியாக ஸ்பெயின் வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

2024-ல் மட்டும் ஸ்பெயின் நாட்டிற்கு கடல்வழியாக புலம்பெயர்ந்து வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஸ்பெயின் இடப்பெயர்வு உரிமைகள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.மேற்கு ஆப்பிரிக்க ந... மேலும் பார்க்க

இணையவழி பட்டா சேவை தற்காலிக நிறுத்தம்!

இணையவழி பட்டா சேவை தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:வருவாய் ம... மேலும் பார்க்க

டிச. 30-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் டிச. 30 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை பல்கலை. வளா... மேலும் பார்க்க