உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
எழும்பூா் ரயில் நிலையத்தில் 7,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 7,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக 20 மூட்டைகள் கிடப்பதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்டறிந்தனா். அதில் 7,400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை கைப்பற்றி சிபிசிஐடி காவல் துறையிடம் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், ரேஷன் அரசி கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.