செய்திகள் :

'எவ்வளவு செலவானாலும் மனிதர்கள் தான் வேலைக்கு வேண்டும்' AI க்கு Bye சொல்லும் ஸ்வீடன் நிறுவனம்

post image

'ஏ.ஐ -யை எங்கள் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்தப் போகிறோம். இதன் மூலம், சில வேலைகளை எளிதாக்கப் போகிறோம்' என்று பல முன்னணி நிறுவனங்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு நிறுவனம் இதற்கு தலைகீழான முடிவை எடுத்துள்ளது.

அதாவது, அந்த நிறுவனம் ஏ.ஐ-யில் இருந்து மனிதர்களுக்கு மாறியிருக்கிறது.

ஸ்வீடனைச் சேர்ந்த கிளார்னா நிறுவனம் நிதி சார்ந்த நிறுவனம். கடன் வழங்கும் இந்த நிறுவனத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 5,500 முழுநேர பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

கடன் நிறுவனம்
கடன் நிறுவனம்

2023-ம் ஆண்டு முதல் பணியாளர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்திய, இந்த நிறுவனம் ஏ.ஐ பக்கம் சாயத் தொடங்கியது. இதன் விளைவாக, கடந்த ஆண்டின் இறுதியில், இந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 3,400.

மொழிபெயர்ப்பு, தரவு பகுப்பாய்வு, மார்க்கெட்டிங் போன்றவற்றிற்கு ஏ.ஐயை பயன்படுத்தியதால், இந்த நிறுவனம் 10 மில்லியன் டாலர்களைச் சேமித்திருக்கிறது. 700 வாடிக்கையாளர் சேவை ஏஜென்டுகள் செய்யும் வேலையை ஏ.ஐ செய்து வந்துள்ளது.

இது குறித்து கடந்த டிசம்பர் மாதம், 'மனிதன் செய்யக்கூடிய வேலைகளை ஏ.ஐயை செய்கிறது' என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செபாஸ்டியன் சீமியாட்கோவ்ஸ்கி கூறியிருந்தார்.

ஆனால், இப்போது அவரே, 'ஏ.ஐ செய்யும் வேலை அவ்வளவு தரமானதாக இல்லை. என்ன இருந்தாலும், நிறுவனத்திற்குள் மனிதர்கள் இருக்க வேண்டும்.

பிசினஸ், பிராண்டிங் என எந்தக் கோணத்தில் எடுத்துக்கொண்டாலும், வாடிக்கையாளர்களுக்கு உதவ எப்போதும் நிறுவனத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும்.

ஏ.ஐ பயன்பாட்டால் செலவும் குறைகிறது... தரமும் குறைகிறது' என்று கூறியுள்ளார்.

'இந்தத்' துறைகளில் B.Sc, B.E, B.Tech... படித்திருக்கிறீர்களா? - இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?வனவியல் மற்றும் சுற்றுச்சூழல், புவியியல், நீர் வளம் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் ஆராய்ச்சியாளர் (Scientist Engineer)மொத்த காலி பணியிடங்கள்: 31சம்பளம... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு; என்ன வேலை; யார் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அலுவலக உதவியாளர். மொத்த காலிப் பணியிடங்கள்: 6சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 34.கல்வித் தகுத... மேலும் பார்க்க

Career: 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; வங்கியில் பியூன் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஆபீஸ் அசிஸ்டென்ட் (பியூன்)மொத்த காலிப் பணியிடங்கள்: 500; தமிழ்நாட்டில் 24.வயது வரம்பு: 18 - 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)குறைந்தபட... மேலும் பார்க்க

எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே' - வங்கி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்; நீங்கள் தயாரா?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?வட்ட அதிகாரிகள் (Circle Based Officers)மொத்த காலியிடங்கள்: 2,600; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120வயது வரம்பு: குறைந்தபட்சம... மேலும் பார்க்க

Career: வங்கியில் 'மேனேஜர்' பணி; யார் விண்ணப்பிக்கலாம்?

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடுஎன்ன பணி?கிரெடிட் மற்றும் ஐ.டி. பிரிவுகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி.மொத்த காலி பணியிடங்கள்: 500வயது வரம்பு: குறைந்தபட்சம் 22; அதிகபட்சம் 30 (சில பிரிவி... மேலும் பார்க்க

Appraisal-ன் போது, அதிக சம்பள உயர்வு வேண்டுமா? நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டிரிக்ஸ்!

வேலைக்கு செல்வோர் பலருக்கும் முக்கியமான ஒன்று 'சம்பளம்'. ஒவ்வொரு ஆண்டும், நம் திறன் மற்றும் வேலையை பொறுத்து சம்பளம் ஏற்றப்படும். 'அப்ரைசல்' (Appraisal) என்ற நடைமுறைக்கு பிறகே, இந்த சம்பள ஏற்றம் நடக்கு... மேலும் பார்க்க