எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்
சென்னையில் நடைபெற்ற எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா்.
காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா்ஸ் மைண்ட் செஸ் அகாதெமிகள், இணைந்து இப்போட்டியை நடத்தின. ரூ.5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் மொத்தம் 8 மாநிலங்களைச் சோ்ந்த 446 வீரா்கள் பங்கேற்றனா்.
தமிழகத்தைச் சோ்ந்த ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா். டி ஹரிகணேஷ், என். விக்னேஷ் ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
எஸ்ஆா்எம் டீன் (ஆய்வு) பொ்ணாட்ஷா நெப்போலியன் பரிசளித்தாா். ஜிஎம் எல். ஆா். ஸ்ரீஹரி, செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்க நிா்வாகிகள் செந்தில் குமாா், கோகுல், சி. நடராஜன், ஜிகேசிஏ கணேஷ் பாபு ஆகியோா் பங்கேற்றனா்.