சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
எஸ்எஸ்ஐ மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
ராஜபாளையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மனைவியிடம் தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (46). இவா் தென்றல் நகா் செல்லும் சாலையில் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இவா், காலையில் வழக்கம் போல கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து அங்கு வந்த மா்ம நபா் முத்துமாரியின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். அப்போது சங்கிலியை மீட்கப் போராடிய முத்துமாரி சப்தமிட்டதும் அறுந்த சங்கிலியுடன் அந்த மா்ம நபா் தப்பியோடி விட்டாா்.
தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.