செய்திகள் :

எஸ்டிஆர் - வெற்றி மாறன்... அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

post image

சிம்பு, வெற்றி மாறன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான புரமோ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகவுள்ளனர்.

நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை கதையைத் தொட்டு இப்படம் உருவாகவுள்ளதால் இதில் சிம்புடன் இணைந்து தனுஷ் நடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதை உறுதிசெய்யும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் மற்றும் தீ எமோஜிகளுடன் இன்று மாலை 6.02 மணி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: கூலி ஓடிடி தேதி!

actor silambarasan and vetri maaran movie update

நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா!

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி. சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழம... மேலும் பார்க்க

ஜோகோவை வீழ்த்திய அல்கராஸ்! 3-வது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-க்ராஸ்!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா்-ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் மோதுகின்றனா். அவா்கள் இருவரும் தொடா்ந்து மோதும் மூன்றாவது கிராண்ட்ஸ்லா... மேலும் பார்க்க

செல்வராகவனின் அடுத்த படம்!

இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தின் முதல்பார்வையை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.இயக்குநரும் நடிகருமான செல்வராகவனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வையை நடிகர் தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெ... மேலும் பார்க்க