தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக...
எஸ்டிஆர் - வெற்றி மாறன் படத்தின் புரோமோ அப்டேட்!
நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான புரமோ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகவுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோ விடியோவை இன்னும் சில நாள்களில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புரோமோவை பார்த்த சில இயக்குநர்கள் வெற்றி மாறனைப் பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் இந்த அறிவிப்பு விடியோவுக்காக காத்திருக்கின்றனர்!
இதையும் படிக்க: 1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?