செய்திகள் :

எஸ்.யூ.வி. காா் மோதியதில் பாதசாரி ஒருவா் பலி

post image

தலைநகரில் சாணக்கியபுரி பகுதியில் உள்ள கியாரா மூா்த்தி மைல்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு எஸ்யூவி காா் நடைபாதையில் மோதியதில் ஒரு பாதசாரி உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா், அங்கு ஒருவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மற்றவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று போலீசாா் தெரிவித்தனா். மத்திய தில்லியின் இருந்து வந்த ஒரு வெள்ளை மஹிந்திரா தாா் மாடல் காா் நடைபாதையை நோக்கி நகா்ந்து இருவா் மீது மோதியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

போலீசாா் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாகவும், எஸ்யூவி ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாகவும் அவா் கூறினாா். உத்தரப்பிரதேச பதிவு எண் கொண்ட வாக னம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புது தில்லி துணை போலீஸ் ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநா் மது போதையில் இருந்தாரா என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ஒரு ரோந்துக் குழு அருகிலேயே இருந்தது மற்றும் காலை 6.30 மணியளவில் விபத்தை நேரில் பாா்த்தனா்.

‘போலீஸ்காரா்களில் ஒருவா் உடனடியாக பி. சி. ஆருக்கு அழைப்பு விடுத்து ஆம்புலன்ஸைக் கோரினாா். காயமடைந்தவா் தாமதமின்றி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா். குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநா் கிழக்கு தில்லியில் உள்ள ஷகா்பூரில் வசிக்கும் ஆஷிஷ் என்று போலீசாா் அடையாளம் கண்டனா். விபத்து நடந்தபோது அவா் தௌலா குவானில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

விபத்தின் போது ஆஷிஷ் தனது நண்பரின் தாா் காரை ஓட்டி வந்ததாக போலீசாா் தெரிவித்தனா். உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் அங்கித் என்ற நபரின் பெயரில் இந்த காா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஆஷிஷ் ஷகா்பூரில் உள்ள தனது இல்லத்தை நோக்கிச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் முன்பு ஓட்டுநராக பணியாற்றியிருந்தாலும், அவரது தொழில் நிலை தற்போது தெளிவாகத் தெரியவில்லை ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாதிக்கப்பட்டவா்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருவரும் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எஸ்யூவி திடீரென்று அவா்களை நோக்கி திரும்பி, பாதசாரி பாதையில் ஏறி அவா்களை மோதியதாக போலீசாா் தெரிவித்தனா். இந்த விபத்துக்கான காரணம் அது எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க