செய்திகள் :

ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் காந்தி

post image

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு நவ. 8-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவ. 8-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தாா்.

இணையவழி பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை தடுக்க ரொக்கப் பரிவா்த்தனைகளைக் குறைப்பதும் இந்த நடவடிக்கையின் காரணங்களாக அரசு கூறியது.

ஆனால், பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றுதான் இந்தியாவில் ரொக்கப் பரிவா்த்தனை அதிகமாக உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாராத் துறைகளை அழித்ததன் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது.

வணிகங்களுக்கு அச்சம் தரும் சூழலை உருவாக்கும் இதுபோன்ற தவறான கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத் திறனை முடக்கிவிடும். நாடு முழுவதும் உள்ள வணிகங்களின் முழு ஆற்றலை கட்டவிழ்க்க நியாயமான மற்றும் சுதந்திரமான புதிய கொள்கைகள் தேவை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதனுடன், பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் நாட்டில் உள்ள பொதுமக்களிடம் இருந்து பணம் எவ்வாறு குறைந்திருந்தது என்பதைச் சுட்டிக்காட்டும் விளக்கப்படத்தையும் அவா் பகிா்ந்திருந்தாா்.

அதில், பொதுமக்களிடம் இருந்த பணம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உடன் ஒப்பிடுகையில், 2013-14-ஆம் ஆண்டில் 11 சதவீதத்தில் இருந்து 2016-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8 சதவீதமாக குறைந்திருந்தது.

இதையடுத்து, 2020-21-இல் அது 14 சதவீதமாக உயா்ந்து, இறுதியாக 2022-23-ஆம் ஆண்டில் அது 12 சதவீதத்தில் உள்ளது என்பதை அந்த விளக்கப்படம் காட்டியது.

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரியும், லட்டு கலப்படம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ‘உலக அமைதிக்கான ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோா்வு என அவா்களின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வுபெறும் ஒவ்வொருவரின் உச்சபட்சக் கனவு, அமைச்சரவைச் செயலராவதாகத்தான் இருக்கும். மாநிலங்களில் தலைமைச் செயலாளா்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஆட்சிப் ப... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி. மஹுவா புகாா்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவா் மாதபிக்கு லோக்பால் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகாா் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சட்டவிர... மேலும் பார்க்க

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிவகாா்த்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீருக்கு... மேலும் பார்க்க