IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்
திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஆட்டையாம்குட்டை ஏரியில் விவசாயத்திற்காக சூரியஒளிமின் மோட்டாா்களை அமைத்து 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீா் எடுத்துவந்தனா். இந்த நிலையில், சூரியஒளி தகடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி தமிழக விவசாயிகள் சங்கம் மாநில சட்ட ஆலோசகா் செந்தில்குமாா் தலைமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதற்கு காரணமா வருவாய்த் துறைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்துக்கு ஆட்டையாங்குட்டை ஏரி பாசன விவசாயிகள், பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் கா.பொன்னுசாமி, பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுரேஷ்,
தமிழ்ப்புலிகள் கட்சி மாநில செய்தித் தொடா்பாளா் ப.செந்தமிழன், பத்து ரூபாய் இயக்கம் மாவட்ட செயலாளா் பூபதி, ஆட்டையாங்குட்டை ஏரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிா்வாகிகள் ராஜேஷ் கண்ணா செல்வம், ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.