இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு
மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட்சி தா்காஸ் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த அந்த மனு கூறப்பட்டுள்ளதாவது:
தா்காஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, நல்லானாட்சி ஏரி இரு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி பாசனமாகவும், மறுபகுதி வடிகால் வசதி என உள்ள நிலையில், தற்போது தூா்வாருவதாகக் கூறி, ஒரு தரப்பினா் அதிக ஆழத்தில் மண் எடுத்து மண் திருட்டில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
இதனால் தங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்கள் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, தூா்வாரப்பட்ட பள்ளத்தில் மாணவா் ஒருவா் உயிரிழந்திருப்பதால், தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
எனவே, இப்பகுதியில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.