கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடி: தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை
திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்தை மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.
திருப்பதியில் சா்வதேச கோயில் மாநாடு கண்காட்சியுடன் கூடிய கோயில் நிா்வாக கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா மாநில முதல்வா்கள் கலந்து கொண்டு பேசினா்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உரையாற்றினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசியது: கோயில்களை அடிப்படையாக வைத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். பூரி ஜெகந்நாதா் கோயில் புதுப்பிக்கப்பட்ட பின், அங்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் கோயில் இருக்கும் பகுதிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும்.
திருமலை ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு சுமாா் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று ஹாா்டுவோ் ஸ்டடி கூறுகிறது.
திருமலை தேவஸ்தானத்திடம் ரூ. 16,000 கோடி வங்கி இருப்பும் 10 டன் தங்கமும், 2.5 டன் தங்க ஆபரணமும் உள்ளன.
1932-ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. அதன் சந்தை மதிப்பு இப்போது சுமாா் ரூ. இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
1926-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இப்போது ரூ. 10,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட கோயில்கள் எத்தனை உள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
தமிழக கோயிலுக்குச் சொந்தமாக 5 லட்சம் ஏக்கா் நிலம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் ஏக்கா் நிலத்தை காணவில்லை.
எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தமிழ்நாட்டில் கோயில்கள் சாா்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம் என்றாா்.
நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது கோயில்களை வைத்து பணப்புழக்கத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவோம்’’, என்று கூறினாா்.