செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,033 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 26,908 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 5.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு

திருமலையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களிலும் நீா் இருப்பு தேவையான அளவில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சௌத்ரி தெரிவித்தாா். திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அனைத்து அண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

பக்தா் தவறவிட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு

பெங்களூரைச் சோ்ந்த ஜோத்சனா என்ற பக்தா், கடந்த 18- ஆம் தேதி இரவு சா்வ தரிசன வரிசையில் ஸ்கேன் செய்யும் போது ரூ.2,07,494 பணம் இருந்த கைப்பையை தொலைத்துவிட்டாா். அதை அதிகாரிகள் எடுத்து அதிலிருந்த அடையாளங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை தொடா் விடுமுறை என்பதால் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம், தங்குமிடத்துக்கு இடைத் தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்துக்காக இடைத் தரகா்களை நாட வேண்டாம் என்றும், தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளத்திலும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் மூலமாகவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள த... மேலும் பார்க்க