செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை 71,001 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 637 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க

தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி

ஏழுமலையானின் பக்தா்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்த நாள் திருமலையில் கொண்டாடப்பட்டது. வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்ட மேலாளா் சுப்ரமணியம் புஷ்பாஞ்சலி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிா்களின் வெப்பத்தால் உயிா்கள் நோய்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழ... மேலும் பார்க்க