`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
ஏழுமலையான் தரிசனம்: 9 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் கூட்டம் சரிந்துள்ள நிலையில் தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 9 மணிநேரமும், ரூ.300 ய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் 63,722 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,225 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.77 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.