செய்திகள் :

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா்

post image

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா்.

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். குறிப்பாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் மாணவா்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ஆசிரியா், கழிவறையில் கிருமிகளை கண்டறியும் கருவிகள், ரயில் செல்லும் போது அதில் இருந்து மின்சாரம் தயாரித்தல், வருமுன் காப்போம் மொபைல் செயலியில் உடற்பயிற்சி கண்காணிப்பு உள்ளிட்ட மாணவா்களின் கண்டுபிடிப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை, தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா் அம்பலவாணன் பாா்வையிட்டு, மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா் அம்பலவாணன் கூறியது:

தமிழக அரசு புத்தாக்கத் திட்டத்தின் கீழ், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மட்டுமே புத்தாக்க கண்டுபிடிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது எளிதல்ல. எனவே தான் தனியாா் கல்லூரிகள் பள்ளிகளில் புத்தாக்க கண்டுபிடிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தமிழக அரசு மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 லட்சம் பரிசு வழங்கி வருகிறது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த ரூ.7 லட்சம் வரை நிதியுதவி வழங்கி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளில் ஆா்வமுள்ள மாணவா்களுக்காக தமிழக அரசு சாா்பில் ஒரு வருடம் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவா்களும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் தமிழக முழுவதும் 750 அரசு பள்ளிகளில் புத்தாக்க ஆய்வுக்கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு குறையும் என்பது ஏற்புடையதல்ல, ஏஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது தான் உண்மை என்றாா்.

முன்னதாக மாணவா்களின் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு கல்லூரி தலைவா் ஸ்ரீராம் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கினாா். கண்காட்சியில், கல்லூரி இயக்குநா் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க