சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோமெல் வாரிகன்!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிகன் முதல்முறையாக வென்று அசத்தியுள்ளார்.
கடந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிகன் உள்பட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் நோமன் அலியும் இடம்பெற்றிருந்தார்.
ஜோமெல் வாரிக்கன் (மேற்கிந்தியத் தீவுகள்)
இந்த நிலையில், பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோமெல் வாரிக்கன் 10 விக்கெட்டுகள் மற்றும் 31* ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க.. சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்! -முன்னாள் கேப்டன் நம்பிக்கை
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது போட்டியில் அவர் 54 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நாடுகளில் மேற்கிந்தியத் தீவுகளை முதல் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு இட்டுச் சென்ற ஜோமெல் வாரிகன் ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் என்ற விருதையும் வென்றுள்ளார்.
32 வயதான ஜோமெல் வாரிக்கன் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவர் ஐசிசி விருதை வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக ஷமர் ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் 2024 இல் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.