ஐசிசி வெளியிட்ட 2024-இன் ஒருநாள் அணி..! இந்தியர்கள் யாருமே இடம்பெறவில்லை!
2024ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறதாதது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் 4 இலங்கை வீரர்கள், 3 பாகிஸ்தான் வீரர்கள், 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
1. சைம் ஆயூப் (பாகிஸ்தான்)
9 போட்டிகள், 515 ரன்கள், அதிகபட்சம் -113 ரன்கள், சராசரி - 64.37, சதங்கள், 1 அரைசதம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சௌம் ஆயூப்புக்கு சிறப்பான ஆண்டாக 2024 இருந்துள்ளது. நவம்பரில் அறிமுகமான இவர் ஆஸி, ஜிம்பாப்வேயில் கலக்கினார். கடைசி 5 இன்னிங்ஸில் 3இல் சதமடித்துள்ளார்.
2. ரஹ்மானுல்லா குர்பாஜ் (ஆப்கானிஸ்தான்)
11 போட்டிகள், 531 ரன்கள், அதிகபட்சம் - 121, சராசரி - 48.2, 3 சதங்கள், 2 அரைசதங்கள்.
2021இல் அறிமுகமான இவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.
3. பதும் நிசாங்கா (இலங்கை)
12 போட்டிகள், 694 ரன்கள், அதிகபட்சம் - 210, சராசரி - 106.4, 3 சதங்கள், 2 அரைசதங்கள்.
ஆப்கானிஸ்தானுடன் 210* அடித்ததும் மூலம் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்தார்.
2024இல் அதிக ரன்கள் குவித்த்வர்கள் பட்டியலிலும் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
4. குசால் மெண்டிஸ் (இலங்கை)
17 போட்டிகள், 742 ரன்கள், அதிகபட்சம் - 143, சராசரி 53, 1 சதம், 6 அரைசதங்கள்.
2024இல் அதிக ரன்கள் குவித்தவராக குசால் மெண்டிஸ் இருக்கிறார். நியூசிலாந்து உடனான 143* ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் எடுத்த 27ஆவது அதிகபட்ச ரன் ஆக இருக்கிறது.
5. சரிதா அசலங்கா (இலங்கை)
16 போட்டிகள், 605 ரன்கள், அதிகபட்சம் -101, சராசரி - 50.2, 1 சதம், 4 அரைசதங்கள்.
இலங்கை கேப்டன் அசலங்கா அசத்தலாக விளையாடியுள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தியுள்ளார்.
6. ஷெர்பானே ரூதர்போர்டு (மே.இ.தீவுகள்)
9 போட்டிகள், 425 ரன்கள், அதிகபட்சம் -113, சராசரி - 106.2, 1 சதம், 4 அரைசதங்கள்.
டிச.2023இல் அறிமுகமான 26 வயதான இவர் பந்துகளை விடவும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்டராக கலக்கி வருகிறார்.
7. அஜமதுல்லா ஓமர்ஜாய் (ஆப்கானிஸ்தான்)
12 போட்டிகள், 417 ரன்கள், அதிகபட்சம் -149, சராசரி - 52.1, 1 சதம், 3 அரைசதம், 17 விக்கெட்டுகள்.
2024 ஆண்டு முழுவதும் சிறந்த ஆல்-ரவுண்ட்ராக விளையாடி வருகிறார்.
8. வனிந்து ஹசரங்கா (இலங்கை)
10 போட்டிகள், 26 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு - 7/19.
2024ஆம் ஆண்டில் ஒரு போட்டிக்கு சராசரியாக 2.6 விக்கெட்டுகள் எடுக்கும்படி அசத்தலாக பந்துவீசியுள்ளார்.
9. ஷாஹீன் ஷா அப்ஃரிடி (பாகிஸ்தான்)
6 போட்டிகள், 15 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு - 4/47.
6 போட்டிகளை மட்டுமே விளையாடினாலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
10. ஹாரிஷ் ரௌஃப் (பாகிஸ்தான்)
8 போட்டிகள், 13 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு - 5/29/
ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பந்துவீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரால் மட்டுமே அந்தத் தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்.