ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், சுண்டக்குடி கிராமத்தில் ரூ.13.18 லட்சம் மதிப்பீட்டிலும், தா.பழூா் அருகேயுள்ள குணமங்கலம் கிராமத்தில் ரூ.13.41 லட்சம் மதிப்பீட்டிலும், காசாங்கோட்டை கிராமத்தில் ரூ.15.25 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டிமுடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா புதன்கிழமை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் சாய்நந்தினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.