போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
லாக்கி ஃபெர்குசன் விலகல்
காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Bounce back stronger, Lockie! pic.twitter.com/mioIK42wfC
— Punjab Kings (@PunjabKingsIPL) April 14, 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பந்துவீச்சின்போது, லாக்கி ஃபெர்குசனுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. அதனால், அவர் இரண்டு பந்துகளுக்குப் பிறகு அந்த ஓவரை வீசாமல் பெவிலியனுக்குத் திரும்பினார். காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.