செய்திகள் :

ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!

post image

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இதையும் படிக்க: பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சுனில் நரைன் புதிய சாதனை

பெங்களூருவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் விளாசி சுனில் நரைன் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 178 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் 100 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: சிஎஸ்கே ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஆப்கன் வீரர்!

280 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும், 275 சிக்ஸர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: ஹைதராபாத்தில் லக்னௌ சரவெடி! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் ... மேலும் பார்க்க

ஷர்துல் தாக்குர் 100*..! ஐபிஎல்லில் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!

ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கான போட்டிகள் மார்ச் 28, ஏப்ரல் 5, 11, 25, 3... மேலும் பார்க்க

ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ந... மேலும் பார்க்க

பந்துவீச்சை தேர்வு செய்த லக்னௌ; அதிக ரன்கள் குவிக்கும் நம்பிக்கையில் சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ... மேலும் பார்க்க

என்னுடைய வேலையை செய்தேன்; அணியின் வெற்றிக்கு உதவிய டி காக் பேச்சு!

தொடக்க ஆட்டக்காரராக என்னுடைய வேலையை செய்தேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 18-வது சீசனில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரை... மேலும் பார்க்க