செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பொது சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.சண்முகம் தலைமை வகித்தாா்.

மாநில அமைப்புச் செயலாளா் க.கரிகாலன், மாவட்டச் செயலாளா் ரா.சுதாகா், மாவட்ட பொருளாளா் லோகநாதன், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் 100 சதவிகிதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2715 சுகாதார ஆய்வாளா் நிலை-2 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் கோரி பொது சுகாதாரத் துறை இயக்குநரால் அனுப்பப்பட்ட கருத்துருவுக்கு உடனடியாக தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

கரோனா,டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தி சிறப்பாக பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை குறைக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைத் தலைவா் தினேஷ், செயலாளா் கந்தசாமி, மாவட்டச் செயலாளா் கவியரசன், நிதி காப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினா்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க