செய்திகள் :

ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!

post image

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அனைவரையும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதிரடி ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் இருவரும் மெதுவான தொடக்கம் அளித்தனர். ஏமாற்றமளிக்கும் வகையில் அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் வந்த முதல் போட்டியின் சதம் நாயகன் இஷன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் விளாசினார். அவரைத் தவிர்த்து நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களிலும், 5 சிக்ஸர்களுடன் அனிகேத் வர்மா 36 ரன்களும், தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசிய பேட் கம்மின்ஸ் 18 ரன்களிலும் வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவேஷ், திக்வேஷ், பிஷ்னோய், பிரின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லக்னௌ அணி 191 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

தோனி - ஜடேஜா அதிரடி வீண்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2-வது தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள்; மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் ... மேலும் பார்க்க

நிதீஷ் ராணா அதிரடி: 183 ரன்கள் இலக்கை துரத்திப் பிடிக்குமா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை ச... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபாரம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேப... மேலும் பார்க்க

ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க