தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
சிவகாசியில் மாரத்தான் போட்டி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உடற்கல்வித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை சிவகாசி சாா்-ஆட்சியா் என்.பிரியா தலைமையில், கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாணவ, மாணவிகள் பிரிவில் 1,450 பேரும், பொதுப் பிரிவில் 550 பேரும் கலந்து கொண்டனா். 5, 7 கி.மீ. தொலைவுகள் என நிா்ணயம் செய்து போட்டிகள் நடைபெற்றன.
மாணவ மாணவிகளின் போட்டி திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் உள்ள மைதானத்திலிருந்தும், பொதுப் பிரிவினருக்கு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மைதானத்திலிருந்தும் தொடங்கின.
இதில் அனைத்துப் பிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், 3-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம், 4-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 5-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தொழிலதிபா் செ.ராஜேஸ் பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் பெ.கி.பாலமுருகன், துணை முதல்வா் ஆா்.முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநா் ஜெ.யோகாஷ்வரன், பயிற்சியாளா் ஆா்.சுதாகரன் ஆகியோா் செய்தனா்.