காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்! பெங்களூரு அணி அபார வெற்றி!
சண்டீகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 20) நடைபெற்ற 37-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றியை ருசித்தது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே ஸ்கோர்போர்டில் சேர்க்க முடிந்தது.
158 ரன்கள் என்ற எளிய இலக்குடன் அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விராட் கோலி 73 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அந்த அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.