செய்திகள் :

ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்!

post image

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது.

"மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தேர்தலுக்கு முன்பு ஐயப்பனை ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர்" என கேரள பாஜக விமர்சித்திருந்தது.

Sabarimala
Sabarimala

இந்த நிலையில் தமிழக பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "தமிழகத்தில் தொடர்ந்து இந்துமத நம்பிக்கை புண்படுத்தப்பட்டு வருகிறது. பினராயி விஜயன் பெரியார் விஜயனாக மாறி, ஸ்டாலினை உலக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்.

ஸ்டாலின் இங்கே இந்து நிகழ்வுகள் எதற்கும் வந்தது கிடையாது. கோவில் கும்பாபிஷேகங்களுக்கு போவது கிடையாது. தமிழ்நாட்டில் 35,000க்கும் அதிகமான கோவில்கள் உள்ளது, எதற்கும் அவர் சென்றதில்லை.

ஆனால் ஐயப்பன் பக்தர்கள் கூட்டத்துக்கு பினராயி விஜய் கூப்பிட்டதால் போவாரா, "எனக்கு நம்பிக்கை இல்லை" என சொல்ல வேண்டியதானே. ஸ்டலினின் மகன் 'சனாதனத்தை ஒழிப்பேன்' என இந்து தர்மத்துக்கு எதிராக பேசியபோது அவர் கண்டிக்கவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

யார் யாரோ இந்து தர்மத்துக்கு எதிராகப் பேசியிருக்கின்றனர், அதையெல்லாம் கண்டிக்கவில்லை. இப்போது எந்த தார்மீக உரிமையில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு போவார். இது இந்துக்களின் மன உணர்வை உதாசினப்படுத்துவதாகும்." எனப் பேசியுள்ளார்.

BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK | Imperfect Show

* முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமனா? - மாணவர்களுடன் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் வீடியோ வைரல்* `அறிவியல் கட்டுக்கதையல்ல...' - கனிமொழி கண்டனம்* அனுராக்கை கிண்டல் செய்து விமர்சித்த சு.வெங்க... மேலும் பார்க்க

``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து... மேலும் பார்க்க

``காதல் திருமணம் - பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்'' - அண்ணாமலை

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு கண்டனம்!

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேச... மேலும் பார்க்க