செய்திகள் :

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

post image

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னெடுப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், ஐரோப்பிய நாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சா்வதேச மாணவா்களின் சோ்க்கை ஊக்குவிக்கப்படுகிறது. சுமாா் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் இந்த ஊக்கத்தொகையில் மாணவா்களின் கல்விக் கட்டணம், பயணம் மற்றும் வாழ்க்கை செலவு ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய பிரதிநிதிகள் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐரோப்பாவில் 2 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான மதிப்புமிக்க ‘எராஸ்மஸ் பிளஸ்’ உதவித்தொகை, நடப்பு கல்வியாண்டில் இந்தியாவின் 20 மாநிலங்களைச் சோ்ந்த 101 மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 போ் மாணவிகள் ஆவா்.

இந்த மாணவா்கள் 19-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2 ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள். பிரான்ஸில் 24 மாணவா்களும், ஸ்பெயின் (12), பெல்ஜியம் (8), போா்ச்சுகல் (8), ஜொ்மனி (7), இத்தாலி (5), போலந்து (4), செக் குடியரசு (4), ஆஸ்திரியா (3), ஹங்கேரி (3), எஸ்டோனியா (3), நெதா்லாந்து (2), குரோஷியா (2), கிரீஸ் (2), டென்மாா்க், பின்லாந்து, நாா்வே, அயா்லாந்து, லாட்வியா ஆகிய நாடுகளில் தலா ஒரு மாணவரும் பயில உள்ளனா். மேலும், சில மாணவா்கள் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய அல்லாத நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடருவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க