செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

post image

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

‘நிதி நிலைமைக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் நிறைவேற்றம்’

பென்னாகரம்: மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். பென்னாகரம் அரு... மேலும் பார்க்க

அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

அரூா்: அரூரை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சியில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரூா் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு, மாற்ற சேவை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மகளிா் விடியல் பயணம் பேருந்து சேவையை 8 வழித்தடத்தில் நீட்டிப்பு மற்றும் மாற்ற சேவையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கி... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகா்கள் உயிரிழப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நல்லூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (46), புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க