ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் சென்ற பிளஸ் 2 மாணவி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பி. மோட்டுபட்டியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகள் மேனிகா (16) அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஒகேனக்கல் சென்றவா் ஊட்டமலை பரிசல்துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற மேனிகா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஒகேனக்கல் தீயணைப்பு வீரா்கள் மேனிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.